நான் மதிக்கும் காந்தி (1)

வேறு பல அரசியல் தலைவர்களுக்கும் காந்திக்கும் உள்ள மிக பெரிய வேறுபாடு, காந்தி "குறிக்கோளுக்கும்" "குறிக்கோளை அடையும் வழிக்கும்" ஒரே முக்கியத்துவம் கொடுத்தார். குறிக்கோள் மட்டுமே பெரிது என்று நினைத்த லெனின், ஸ்டாலின்  மற்றும் மாவோ காட்டிய "வழியில்" நடந்த விதம் அவர்களது குறிக்கோளை மக்கள் வெறுக்க வைத்துவிட்டது. நல்ல வேளை நேருவுக்கு அவ்வளவு மனத்திடம் இல்லை.

நன்றி: தமிழ் பேப்பர் 

நேரு நல்விளைவை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறார். நானோ அதனை அடையும் மார்க்கத்துக்கு முதன்மை அளிக்கிறேன். ஒருவேளை நான் அகிம்சையை அளவுக்கு அதிகமாக வற்புறுத்துகிறேன் என்று அவர் நினைக்கலாம். அவருக்கு அகிம்சையில் நம்பிக்கை உண்டு என்ற போதிலும், மாற்று வழிமுறைகளின் வாயிலாக சோஷலித்தைக் கொண்டுவர விரும்புகிறார்

No comments:

Post a Comment