What Mr. Kurshid seems to forgot more often than not, is India is not a homogeneous country, but more heterogeneous than all other sovereign nations in the world. So, naturally, what is important from a state legislature may not have the same level if importance, if any. Also, to claim that TN congress has any understanding on the matter of Tamils' sentiments is beyond laughable. It is appalling
Dinamalar
இந்நிலையில், டில்லியில் தனியார் டி.வி., ஒன்றிற்கு மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தின் மிக பலமான உணர்வுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். தமிழகத்தின் மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சியினர் இவ்விஷயத்தில் பலமான உணர்வுகளை கொண்டுள்ளனர். இவற்றை நான் கருத்தில் கொண்டுள்ளேன். அதே வேளையில் உலகின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களின் எண்ணங்கள் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன. இலங்கையுடன் நாங்கள் உடன்பாடுகளை ஏற்படுத்தியுள்ளோம். இலங்கையுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இலங்கையுடனான இந்த நடவடிக்கைகளும் முக்கியமான ஒன்று என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு, பொருளாதார தடை மற்றும் நட்பு நாடு அந்தஸ்தை கைவிடும் கோரிக்கை ஆகியவற்றை முற்றிலுமாக நிராகரித்த அவர், இவைகளை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். இந்தியாவில் ஏராளமான சட்டசபைகள் உள்ளன. மற்ற சட்டசபைகள் இந்த தீர்மானங்களை ஏற்கவில்லை. அவ்வாறு அந்த சட்டசபைகள் அதை ஏற்றால் அது வேறு விஷயம். தமிழக சட்டசபையின் கவலைகளை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். அதற்காக அது ( தமிழக சட்டசபை) கூறும் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
Dinamalar
No comments:
Post a Comment